வாழ்க்கை ஒரு வட்டம்டா.., மீண்டும் கெத்து காட்டிய ரோகித், விராட்! ரசிகர்கள் பாராட்டு மழை!!

0
வாழ்க்கை ஒரு வட்டம்டா.., மீண்டும் கெத்து காட்டிய ரோகித், விராட்! ரசிகர்கள் பாராட்டு மழை!!

T20 போட்டிகளில் இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், மற்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.

விராட் கோலி VS ரோகித்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் பட்டைய கிளப்பியதன் மூலம் சர்வதேச T20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் படி இந்திய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முதலிடத்தை பிடித்துள்ளனர். ரோஹித் இதுவரை 138 போட்டிகளில் விளையாடி மொத்தம் 3677 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு அடுத்தபடியாக நீண்ட நாள் T20 போட்டிகளில் பின்தங்கியிருந்த விராட் கோலி ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை 106 போட்டிகளில் விளையாடி 3597 ரன்கள் விளாசியுள்ளார்.

ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி – ரூ.1.21 கோடி பரிசு தொகை அறிவிப்பு.., தட்டிச் செல்ல போவது யார்??

மேலும் இவர்கள் T20 போட்டிகளில் 3500 மேல் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து 121 போட்டிகளில் விளையாடி 3497 ரன்கள் குவித்துள்ள நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 3 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4 வது இடத்திலும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆரோன் பிட்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் 5 ஆம் மற்றும் 6 ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here