IPL 2023: ஜியோ சினிமாவின் பிராண்ட் தூதராக இந்தியாவின் 360 டிகிரி நாயகன்!!

0
IPL 2023: ஜியோ சினிமாவின் பிராண்ட் தூதராக இந்தியாவின் 360 டிகிரி நாயகன்!!
IPL 2023: ஜியோ சினிமாவின் பிராண்ட் தூதராக இந்தியாவின் 360 டிகிரி நாயகன்!!

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள, ஜியோ சினிமா தங்களது பிராண்ட் தூதரை அறிவித்துள்ளது.

ஜியோ சினிமா:

மார்ச் மாத இறுதியில் தொடங்க உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்காக அனைத்து அணிகளும் தங்களது, பயிற்சியை தொடங்கி உள்ளன. சர்வதேச அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் அனைவரும் விரைவில், ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரை நேரடியாக ஒளிபரப்புவதற்காக Viacom18 பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் முதல் படியாக, CSK அணியின் தோனியை தங்களது பிராண்ட் தூதராக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதே போல, ஐபிஎல்லை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான உரிமையை ஜியோசினிமா பெற்றிருந்தது. 4 மல்டி கேமரா வசதிகள் பொறுத்தப்பட்டு, பார்வையாளர்கள் தங்களுக்கு வேண்டிய கோணத்தை தேர்ந்தெடுத்து பார்க்கும் வசதியை ஜியோ சினிமா புகுத்த உள்ளதாக முன்பு கூறியிருந்தது.

தீவிர பயிற்சியில் இறங்கி உள்ள சஞ்சு சாம்சன்…, அப்போ ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்று வீரராக இருப்பாரோ??

இதனை தொடர்ந்து, ஜியோசினிமா தனது பிராண்ட் தூதராக இந்தியாவின் 360 டிகிரி நாயகனான சூர்யகுமார் யாதவ்வை அறிவித்துள்ளது. இவர், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது பங்களிப்பை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here