
ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவரது இடத்தை நிரப்புவதற்காக சஞ்சு சாம்சன் மீது அதிக கவனம் எழுந்து வருகிறது.
சஞ்சு சாம்சன்:
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றதை தொடர்ந்து, நடப்பு ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தொடர்களையும் வென்று சாதனை படைத்து வருகிறது. இந்த சாதனையை தொடரும் வகையில், இந்திய அணி வரும் மார்ச் 17ம் தேதி முதல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கிடையில், பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் இருந்து முதுகு வலியால் விலகிய ஷ்ரேயாஸ் ஐயர், எதிர்வரும் ஒருநாள் தொடரில் விளையாடுவதும் சந்தேகமான சூழ்நிலை எழுந்துள்ளது. இதனால், இவருக்கு தகுந்த மாற்று வீரரை பிசிசிஐ தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023: ப்ரோமோ ஷூட்டிங்கில் விராட் கோலி…, வைரலாகும் வீடியோ உள்ளே!!
இந்நிலையில், பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. இதற்கு ஏற்றாற் போல், சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சியில் இறங்கி உள்ள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கேப்சனாக, The focus has always been “WITHIN” என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram