டெஸ்ட் தொடர்களில் களம் இறங்கப்போவது எப்போது?? பதில் அளித்த சூர்யகுமார்!!

0
டெஸ்ட் தொடர்களில் களம் இறங்கப்போவது எப்போது?? பதில் அளித்த சூர்யகுமார்!!
டெஸ்ட் தொடர்களில் களம் இறங்கப்போவது எப்போது?? பதில் அளித்த சூர்யகுமார்!!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், சூர்யகுமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின், 2வது போட்டி நேற்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், இரு நாட்டு வீரர்களும் சாதனை படைத்து இருந்தனர். அதாவது, நியூசிலாந்தின் பந்து வீச்சாளரான டிம் சவுத்தீ, ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். இவரை போல, நியூசிலாந்தின் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த சூர்யகுமார் யாதவ் சதம் (111*) அடித்திருந்தார். இவர் ஒரே ஆண்டில் டி20 போட்டியில் 2 சதத்தை அடித்து ரோஹித் சர்மா சாதனை சமன் செய்து இருந்தார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய பிரக்ஞானந்தா!!

இதன் மூலம், நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகனாகவும் சூர்யகுமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர், குறுகிய வடிவிலான போட்டிகளில் தனது ஆகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், இந்தியாவுக்கான டெஸ்ட் தொடர் அணியில் இடம் பிடித்ததே இல்லை. இது குறித்து பேசிய சூர்யகுமார், டெஸ்ட் போட்டிகளின் பல நுணுக்கங்களை கற்று வைத்துள்ளேன். இதன் மூலம், விரைவில், டெஸ்ட் அணியிலும் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here