மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய பிரக்ஞானந்தா!!

0
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய பிரக்ஞானந்தா!!
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்: அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய பிரக்ஞானந்தா!!

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் இறுதி சுற்றில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியை வீழ்த்தி 5 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்:

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் பல சுற்றுகள் முடிவில், இறுதிப்போட்டிக்கு எட்டு வீரர்கள் முன்னேறி இருந்தனர். இந்த இறுதி போட்டியில், ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோதி வருகின்றன. எட்டு வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ஏழாவது சுற்றில், பிரக்ஞானந்தா, சக நாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியை இன்று எதிர்கொண்டார். இந்த போட்டியில், பிரக்ஞானந்தா 2.5-0.5 என்ற புள்ளி வித்தியாசத்தில் அர்ஜுன் எரிகைசி வீழ்த்தினார். இதன் மூலம், பிரக்ஞானந்தா 9 புள்ளிகளுடன், 8 வீரர்கள் கொண்ட பட்டியலில் 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

IND vs NZ: நியூசிலாந்து அணியிலிருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்…, இதுதான் காரணமா?? முழு விவரம் உள்ளே!!

இந்த பட்டியலில், 20 புள்ளிகளுடன் மேக்னஸ் கார்ல்சன் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து உள்ளார். இவருக்கு அடுத்ததாக, வெஸ்லி சோ 13, குவாங் லீ லீ 11, ஜான் கிரிஸ்டோஃப் டுடா 10 புள்ளிகளுடன் 2, 3, மற்றும் 4 வது இடத்தில் உள்ளனர். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 9 புள்ளிகளுடன் 6 வது இடத்தை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here