தனது 41 வது படத்தை தலை முழுகிய சூர்யா?? பாலாவை கழட்டி விட்டு முக்கிய இயக்குனருடன் கூட்டணி!!

0
தனது 41 வது படத்தை தலை முழுகிய சூர்யா?? பாலாவை கழட்டி விட்டு முக்கிய இயக்குனருடன் கூட்டணி!!

நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் 41 வது படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை பாதியிலேயே விட்டு, இயக்குனர் சிவாவின் படத்தில் சூர்யா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 42 :

நடிகர் சூர்யா, தனது வாடிவாசல் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் SURYA 41 படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சினையால், ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்றதால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் தனது 42வது படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் தனது சூர்யா 41 படத்தை ஜூன் மாதத்தில் முடித்து விடுவார் என்றும், இதனை அடுத்து சிவாவின் பிரம்மாண்ட வரலாற்று கற்பனை படத்தில் நடிப்பார் என்றும்  சொல்லப்படுகிறது. இரண்டு பாகங்களாக தயாராகும், படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சூர்யா 41 குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், திடீரென அடுத்த படம் குறித்த அப்டேட் வந்திருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here