சூர்யா 40 தொடரும் சஸ்பென்ஸ் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0
actor suriya
actor suriya

முன்னணி நடிகரான சூர்யா நடித்துவரும் 40வது படத்தின் பெயர் பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்து பரவிவந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

சூர்யா 40:

சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவர் தான் சூர்யா. அகரம் அறக்கட்டளை என்று ஓர் அறக்கட்டளையை தொடங்கி ஏழை எளிய மக்களின் கல்விக்கு மிக பெரிய உதவி புரிந்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல், பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 ஆகிய படங்களிலும் சூர்யா நடித்து வருகிறார். இவற்றில் சூர்யா 40 படம் தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக, டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கோலிவுட்டில் அறிமுகமாகி உள்ள பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாண்டிராஜ் சமீபத்தில் ட்விட்டர் பதிவில், அன்பான ரசிகர்களே…சூர்யா 40 படத்தில் 35 சதவீதம் படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த கட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிஞ்சதும் ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான் என பதிவிட்டிருந்தார். டைட்டில் மாஸ் ஆ, முன் அறிவிப்போட வரும். ஜுலை வரை டைம் கொடுங்க ப்ளீஸ் என குறிப்பிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here