திருமணத்திற்கு பிறகு இந்தியில் ரி-என்ட்ரி கொடுக்கும் காஜல்.. இதான் படத்தின் பெயராம்!!!

0

தெலுங்கில் மிகவும் பிஸியாக இருந்த நடிகை காஜல் அகர்வால் பழனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இதை தொடர்ந்து அவர் தமிழ் ரசிகர்களால்  முன்னணி நடிகையாக அங்கீகரிக்கப்பட்டு ஏகப்பட்ட தமிழ் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். இந்நிலையில் மீண்டும் அவர் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

நடிகை காஜல் அகர்வால் அவர்கள் பழனியை தொடர்ந்து நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், மாரி, விவேகம் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வந்தார். இதனிடையில் சமீபத்தில் அவருக்கும் தொழிலதிபர் கௌதமுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா என்ற கேள்வி அவர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தியன் 2, ஆச்சார்யா உட்பட பல படங்களில் திருமணத்திற்கு பிறகு நடிக்க தொடங்கினார்.மேலும் காஜல் அவர்கள் இந்தியில் புதிதாக ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது. இந்த படம்  கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது. அந்த படத்திற்கு ‘உமா’ என்றும் பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் மூலம் காஜல் மீண்டும் இந்தி பக்கம் தன் கவனத்தை திருப்பி உள்ளார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here