ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட விஜய் டிவி பிரபலம்… அதுவும் இந்த பிரச்சனைக்காகவா???

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றில்  ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு ஒரு சர்ஜரியும் நடந்துள்ளது.

பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற டிவி சேனல் விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் செம ஹிட்டான ஷோக்களில் ஒன்று  சூப்பர் சிங்கர் என்ற மியூசிக் நிகழ்ச்சி. இது பல சீசன்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவர்கள் எப்படியும் பேமஸ் ஆகி விடுகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் சௌந்தர்யா.

இவர் சூப்பர் சிங்கர் சீசன் 3 மூலம் அறிமுகமானவர். அந்த நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூட வில்லை என்றாலும் அதன் பிறகு அவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் தனது பாடல் திறமையை நிரூபித்து உள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு பின்னணியும் பாடி உள்ளார். மேலும் விஜய் டிவியின் பகல் நிலவு என்ற சீரியலிலும், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதாவது வயிற்றில் ஏற்பட்ட குடல் வால்வு பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்து கொண்டு உள்ளார். இது பற்றிய தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தனக்காக வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here