அன்பே வா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் தான்… Bye Bye சொன்ன முக்கிய பிரபலம்!!!

0

சன் டிவியில் மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வரும் சீரியல்  அன்பே வா. இதில் கதையின் நாயகி பூமிகாவின் சித்தி வந்தனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இனி அந்த கதாபாத்திரத்தில் நடிகை வினோதினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அன்பே வா சீரியல் மக்களின் மனங்கவர்ந்த ஒரு நாடகத் தொடராக சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாநாயகன் வருண் என்ற கதாபாத்திரத்தில் விராட்  மற்றும் கதாநாயகி பூமிகா கதாபாத்திரத்தில் டெல்னா டேவிஸ் நடித்து வருகின்றனர்.மேலும் இவர்களுடன்  பல நட்சத்திர பட்டாளங்களும் இணைந்து உள்ளனர். மேலும் இந்த சீரியலின் வருண் மற்றும் பூமிகா ஜோடி ரொமான்ஸ்க்கு தனி ரசிகர்கள் கூட்டமே  உள்ளனர்.

மேலும் இந்த சீரியல் நொடிக்கு நொடிக்கு பரபரப்பு, விறுவிறுப்பு கொண்டதாக உள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் பூமிகாவின் சித்தி வந்தனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா திடீரென விலகி உள்ளார். இவர் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வருவதால் கால்ஷீட் இல்லாத காரணத்தால் விலகுவதாக இணையத்தில் சில தகவல்கள் உலா வருகிறது. இந்நிலையில் இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை வினோதினி நடிக்க உள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பாவை போல களம் இறங்கிய மற்றொரு விஜய் டிவி நடிகை… யாருன்னு நீங்களே பாருங்க!!!

வினோதினி அவர்கள் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். மேலும் இவர் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது அன்பே வா சீரியலில் களம் இறங்க உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here