பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டயாமில்லை – உலக சுகாதார நிறுவனம்!!

0

பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டயமில்லை என்று அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைந்த அமைப்பான உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உலகில் எங்கு பார்த்தாலும் கொரானா மற்றும் தடுப்பூசி பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் தான் எழுந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் இரண்டாம் அலையின் தாக்கம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. எனவே அனைத்து நாடுகளும் தடுப்பூசி செல்லுவதை தீவிரப்படுத்தி வருகின்றன.

37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!!

ஏற்கனவே உலகில் அதிக அளவிலான மக்கள் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத நிலையில், பணக்கார நாடுகள் மூன்றாவது தவணை செலுத்த அவசரப்பட வேண்டாம் என WHO தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளிக்குத் திரும்பும் மாணவர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறு வயதினரை விடவும் பெரியவர்களை தான் கொரோனா நோய் தொற்று அதிகம் தாக்குவதாகவும் மேலும் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படியும் உலக சுகாதார அமைப்பின் கோவிட் குழுவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் கேத்தரின் ஓ.பிரயின் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here