அப்படி போடு.., விஜய் டிவிக்கு ஆப்பு வச்ச பிரபல சீரியல்.., எந்த சீரியல்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!!!

0
அப்படி போடு.., விஜய் டிவிக்கு ஆப்பு வச்ச பிரபல சீரியல்.., எந்த சீரியல்னு தெரிஞ்சா அசந்து போவீங்க!!!!
சின்னத்திரையில் இல்லத்தரசிகளை கவரும் வகையில் ஜீ தமிழ், விஜய், சன் டிவி உள்ளிட்ட சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு பல தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் அதிரடியான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி பல்வேறு சீரியல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் இதற்கான TRP ரேட்டிங் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதன்படி பார்த்தால் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் விஜய் டிவி சீரியல்கள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்படி 10.28 புள்ளிகளை பெற்று சிங்கப்பெண்ணே சீரியல் முதல் இடத்திலும், 10.23 புள்ளிகளை பெற்று கயல் சீரியல் 2ம் இடத்திலும், 9.76 புள்ளிகளை பெற்று எதிர்நீச்சல் மற்றும் வானத்தைப்போல சீரியல் 3 ம் இடத்திலும், 9.39 புள்ளிகளை பெற்று சுந்தரி சீரியல் 4 வது இடத்திலும், 7.46 புள்ளிகளைப் பெற்று இனியா சீரியல் 5 வது இடத்திலும், 7.32 புள்ளிகளை பெற்று ஆனந்த ராகம் சீரியல் 6 வது இடத்திலும், 6.97 புள்ளிகளைப் பெற்று சிறகடிக்க ஆசை மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் 7வது இடத்திலும், 6.12 புள்ளிகளை பெற்று ஆஹா கல்யாணம் சீரியல் 8 வது இடத்திலும், 5.71 புள்ளிகளை பெற்று கார்த்திகை தீபம் சீரியல் 9வது இடத்தையும் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here