பிரபல சன் டிவி 90ஸ் குழந்தை நட்சத்திரம் திடீர் தற்கொலை – நொடி பொழுதில் தகர்ந்த சினிமா கனவு!!

0
பிரபல சன் டிவி 90ஸ் குழந்தை நட்சத்திரம் திடீர் தற்கொலை - நொடி பொழுதில் தகர்ந்த சினிமா கனவு!!

சன் டிவியில் 25 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான மர்மதேசம் நெடுந்தொடரில், குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய, லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ச்சி தகவல்:

சன் டிவியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான, மர்ம தேசம் தொடரில் குட்டி ராசு என்ற பாத்திரத்தில் நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இந்த சீரியலை தொடர்ந்து விடாது கருப்பு, ஜீபூம்பா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர், சமீபத்தில் வளர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

சினிமா சார்ந்த தொழில்நுட்ப வேலைகளில் கவனம் செலுத்தி வந்த இவர், ஒரு சில குறும்படங்களை இயக்கி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார். வெள்ளி திரையில் இயக்குனராக வலம் வர இருந்த அவர், திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை மீனா முக்கிய முடிவு – என் கணவர் இதனால தான் இறந்தாரு., இனி யாருக்கும் இப்படி ஆகக்கூடாது!!

கடந்த சில மாதங்களாக பண பிரச்சனையால் தவித்து வந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இன்னும் சில காலங்களில், சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வர இருந்த லோகேஷ், திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here