பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி., ஜூன் 30 வரை கோடை விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
நாடு முழுவதும் இப்போது 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்தவுடன் அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இப்போது சண்டிகர் மற்றும் மத்திய பிரதேச பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை அந்தந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது. சண்டிகர் மாநிலத்தில் வரும் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை மொத்தம் 39 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோன்று மத்திய பிரதேச மாநிலத்தில் மே 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை மே 1 முதல் மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here