தமிழக பள்ளிகளுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் அதிரடி முடிவு!!!

0
தமிழக பள்ளிகளுக்கு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை எடுக்கும் அதிரடி முடிவு!!!
தமிழகத்தில் 11, 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த உடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.
எப்போதும் மே மாதம் வரை கோடை விடுமுறை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கோடை விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி விடுமுறையை நீட்டிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here