டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு.., நீரிழிவு நோய் தான் இதற்கு காரணமா??

0
மது ஊழல் வழக்கில் சிக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் முதல் மந்திரி என்ற அடிப்படையில் திகார் சிறையில் இவருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் 4.5 கிலோ வரை எடை குறைந்துள்ளதால் உடல்நலம் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் இவருக்கு இருப்பதால் அதுவே உடல்நல குறைவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதனால் கெஜ்ரிவாலை தொடர்ந்து 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் அதிஷி கூறியுள்ளதாவது கெஜ்ரிவால் பொது சேவையில் ஓய்வின்றி ஈடுபட்டதால் அதுவே அவர் உடல் நலக் குறைவுக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here