சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா.! கடைக்கு சென்றவர்களை ஆராயும் அரசு.! பீதியில் மக்கள்.!

0

கொரோனா வைரஸ் தற்போது தமிழகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கிடையில் சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மளிகை கடைக்காரர்

கொரோனா தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வரலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது. காலை 6 முதல் 1 மணி வரை காய்கறி மளிகை கடைகள், கறிக்கடை, பெட்ரோல் பங்க் போன்றவை திறந்திருக்கும்.

Corporation launches mobile retail outlets for essentials - The Hindu

இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 தேதியில் முடிவடைய உள்ளது. ஆனால் இந்த கொரோனா வீரியம் குறைந்ததாக இல்லை. எனவே இந்த ஊரடங்கு நீடிக்கலாம் என கூறப்படுகிறது.

Coronavirus in India: Tracking country's first 50 COVID-19 cases ...

இந்நிலையில் சென்னை கே.கே. நகரில் உள்ள மளிகை கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மளிகை கடை, வீடு சுற்றுவட்டாரம் அனைத்தையும் சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here