தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படத்தில் இவருடன் சேர்ந்து நடிகை ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் அவரின் சினிமா கேரியரில் தவிர்க்க முடியாத படங்களின் லிஸ்டில் இப்படம் இடம்பெறும்.
அதுமட்டுமின்றி ஆக்சன் மற்றும் காதல் காட்சிகளுக்கு ஏற்ப ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 17 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.