பாலியல் குற்றத்தால் பிரபல வீரர் இடைநீக்கம்…, இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!

0
பாலியல் குற்றத்தால் பிரபல வீரர் இடைநீக்கம்..., இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!
பாலியல் குற்றத்தால் பிரபல வீரர் இடைநீக்கம்..., இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!!

தனுஷ்கா குணதிலகா மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இவருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியான சில முடிவுகளை எடுத்துள்ளது.

தனுஷ்கா குணதிலகா:

இலங்கை அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்ததால் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. இதையடுத்து இலங்கை அணி நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் பெற்றிருந்த தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்க, சிட்னி போலீஸ் இவரை கைது செய்தனர்.

விராட் கோஹ்லியை தொடர்ந்து ரொனால்டோவுக்கு 50 அடி கட்அவுட்டா?? சூடுபிடிக்க காத்திருக்கும் உலக கோப்பை!!

இதனை தொடர்ந்து, சிட்னி போலீஸ் இன்று இவரை கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம், குணதிலகாவுக்கு எதிராக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில், குணதிலகா அனைத்து வடிவ கிரிக்கெட் தொடரில் இருந்தும் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட உள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்று அறிவித்துள்ளது. மேலும், இவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றம் உறுதியானால், கடுமையாக தண்டிக்கப்படுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here