விராட் கோஹ்லியை தொடர்ந்து ரொனால்டோவுக்கு 50 அடி கட்அவுட்டா?? சூடுபிடிக்க காத்திருக்கும் உலக கோப்பை!!

0
விராட் கோஹ்லியை தொடர்ந்து ரொனால்டோவுக்கு 50 அடி கட்அவுட்டா?? சூடுபிடிக்க காத்திருக்கும் உலக கோப்பை!!
விராட் கோஹ்லியை தொடர்ந்து ரொனால்டோவுக்கு 50 அடி கட்அவுட்டா?? சூடுபிடிக்க காத்திருக்கும் உலக கோப்பை!!

உலக கோப்பை கால்பந்து மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் ரொனால்டோ ஆகியோருக்கு போட்டி போட்டு கொண்டு கட் அவுட் வைத்து வருகிறார்கள்.

உலக கோப்பை கால்பந்து:

உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் 20ம் தேதி முதல் கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில், 32 அணிகள் எட்டு பிரிவுகளின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுகள் போல் தங்களுக்குள் முதலில் போட்டி போட்டு கொள்ள உள்ளன. இதற்காக, கால்பந்து வீரர்கள் அனைவரும் பல்வேறு லீக் போட்டிகளில் பங்குபெற்று தங்களை வலுப்படுத்தி வருகிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், இந்த உலக கோப்பை தொடர் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றன. இதனை வெளிப்படுத்தும் விதமாக, தென்னிந்தியாவின், கேரளாவில் உள்ள கோழிகோடு என்னும் கடற்கரை பகுதியில், நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் 30 அடி உயரத்தில் கட்அவுட் வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து, 40 அடி உயரத்தில் பிரேசில் வீரர் நெய்மருக்கும் ரசிகர்கள் கட் அவுட் வைத்து போட்டி போட்டு கொண்டனர்.

ப்ளேயிங் 11 னில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.., ராகுல் டிராவிட் போட்ட புது பிளான்.., இந்தியா வெற்றி பெறுமா??

இந்நிலையில், இந்த இரு வீரர்களை விட ரொனால்டோ தான் பெரியவர் என காட்டும் விதமாக, 50 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள், உலக கோப்பை மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன் விராட் கோஹ்லியின் பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில், இவருக்கு 50 அடியில் ஹைத்ராபாத்தில் ரசிகர்கள் கட்அவுட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here