பள்ளிகள் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் இயங்கும்.,கட்டுப்பாடுகளை தளர்த்தி டெல்லி அரசு அதிரடி!!

0

அண்மையில் மூடப்பட்ட தொடக்கப் பள்ளிகள், நாளை மறுநாளான புதன்கிழமை முதல் வழக்கம் போல் இயங்கும் எனவும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அரசு அறிவிப்பு:

நம் நாட்டின் தலைநகரான டெல்லியில், காற்று மாசு மிகவும் அதிகரித்து வந்தது. காற்றில் 30%-க்கும் மேல், சுண்ணாம்பு உள்ளிட்ட எரிபொருள் கலந்திருப்பதாக காற்று தர மேலாண்மை ஆணையம் எச்சரித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அரசு அறிவித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் தற்போது, காற்று மாசு மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, காற்றின் AQI 352 ஆக பதிவாகியுள்ளது. இதனால், நாளை மறுநாள் முதல் தொடக்கப் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களில் 50% நபர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு அட்டவணை ரிலீஸ் – கல்வித்துறை அதிரடி!!

தனியார் கட்டுமான பணிகளுக்கான தடைகள் தொடரும் என்றும், அரசு சம்பந்தப்பட்ட சாலை, மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் வாகனங்கள் நகருக்குள் செல்ல தற்போதைக்கு அனுமதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here