வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு.., நவ 11, 25 ல் வேலைவாய்ப்பு முகாம்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
வேலையில்லா பட்டதாரி கவனத்திற்கு.., நவ 11, 25 ல் வேலைவாய்ப்பு முகாம்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
வேலையில்லா பட்டதாரி கவனத்திற்கு.., நவ 11, 25 ல் வேலைவாய்ப்பு முகாம்.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ராணிப்பேட்டையில் நவம்பர் மாதம் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காமல் எக்கச்சக்க பட்டதாரிகள் கவலைக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் கவலையை தீர்க்கும் விதமாக தமிழக அரசு, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில், ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த மாதம் நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் இயங்கும்.,கட்டுப்பாடுகளை தளர்த்தி டெல்லி அரசு அதிரடி!!

அதாவது இந்த மாதம் நவம்பர் 11ம் தேதியும் மற்றும் 25 தேதி அன்று தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி இந்த முகாமில், 8 வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ , பி.இ போன்ற படிப்புகளை முடித்த பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் அதிகமான பட்டதாரிகளுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here