வறுத்து அரைத்த ஸ்பெஷல் முட்டை கறி ரெசிபி….! செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!!!

0
வறுத்து அரைத்த ஸ்பெஷல் முட்டை கறி ரெசிபி....! செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!!!
வறுத்து அரைத்த ஸ்பெஷல் முட்டை கறி ரெசிபி....! செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!!!

முட்டையில் அளவற்ற புரோட்டீன் சத்துக்கள் உள்ளது. இதனால் முட்டைகளை அதிக அளவில் நாம் உணவில் சேர்த்து கொண்டால் பலவித நன்மைகளை பெறலாம். மேலும் அதிகப்படியான சத்துக்களும் நமது உடலுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட முட்டை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பெஷல் ரெசிபியை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 5

பட்டை – 1

கிராம்பு – 1

அண்ணாச்சி பூ – 1

மல்லி – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் – 1 கப்

சின்ன வெங்காயம் – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

தக்காளி – 1

செய்முறை

முதலில் ஒரு கடாயில் தேங்காய் துருவல்,பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, மல்லி, மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதனை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வறுத்து அரைத்த ஸ்பெஷல் முட்டை கறி ரெசிபி....! செஞ்சு பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!!!

அதன் பின்னர் அரைத்து வைத்த கலவையை சேர்த்து கொண்டு பச்சை வாடை போகும் வரை லைட்டாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதையடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.அதில் சிறிதளவு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து வரும் வேளையில் முட்டைகளை ஒன்றின் பின் ஒன்றாக உடைத்து உற்ற வேண்டும். முட்டை வெந்து குழம்பு வற்றி வரும் வேளையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.தற்போது வீடே மணக்கும் வகையிலான வறுத்து அரைத்த முட்டை கறி தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here