ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலை – என்ன ஒரு கொடுமை பாருங்களேன்!! 

0

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் உள்பட எந்த ஒரு விளையாட்டையும் விளையாட கூடாது என தாலிபான்கள் கூறியுள்ளனர்.

ஆப்கான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின் தாலிபான்கள் முழு நாட்டையும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் நிலவிவந்த ஜனநாயக ஆட்சியில் பெண்களுக்குச் சுதந்திரம் இருந்தது. ஆனால் தற்போது தாலிபான் பயங்கரவாத அமைப்பால் நிலைமை கைமீறி சென்றுள்ளது.

பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தாலிபான்கள் அறிவித்தாலும் அவர்கள் செயல்படுத்தும் விதிகள் அவ்வாறாக இல்லை. தொடர்ந்து தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக புது புது விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர். ஆண்கள் பெண்கள் சேர்ந்து கல்வி பயில கூடாது என்று இருபாலருக்கும் இடையே திரை வைத்து கல்வி பயிலும் புகைப்படங்களும் இணையத்தில் பரவியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபான் அறிவித்துள்ளனர். தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவர் அஹ்மதுல்லா வாசிக், பெண்களின் உடலை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here