மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் – முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!

0
மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் - முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!
மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் - முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியை தற்போது விவாகரத்து செய்துள்ளார். இதனால் அவர்களின் 8 வருட திருமண பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

முறிந்த திருமண பந்தம்:

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக ஷிகர் தவான் இருந்து வருகிறார். இவருக்கு என்று மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் இவருக்கும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான ஆயிஷா முகர்ஜிக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில், ஆயிஷா முகர்ஜி ஏற்கனவே ஒரு தொழிலதிபருடன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் - முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!
மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் – முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!

இது மட்டுமில்லாமல், இவருக்கு முதல் திருமணத்தின் போது இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. இதனை அடுத்து, இரண்டாவது திருமணத்தில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்-ஆயிஷா முகர்ஜி தம்பதிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய இவர்களது விவாகரத்து பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது தனக்கு விவாகரத்து கிடைத்து விட்டதாக ஆயிஷா முகர்ஜி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் - முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!
மனைவியை பிரியும் பிரபல கிரிக்கெட் வீரர் – முடிவுக்கு வந்த எட்டு வருட திருமண பந்தம்!!

மேலும், அவர் கூறியதாவது முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்த போது மிகவும் பயந்து அழுதேன் , தவறான முடிவை எடுத்து விட்டதாக மிகவும் வருந்தினேன். இந்த நிலையில், என்னுடைய இரண்டாவது திருமணமும் விவகாரத்தில் முடிந்து விட்டதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. விவாகரத்து என்பது புதிய உறவுகளில் முன்னேற எனக்கு சிறந்த பாடங்களை கற்றுக் கொடுத்ததாகவும், என்னை மிகுந்த வலிமை உடையவளாக மாற்றி விட்டதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here