‘மௌனம் பேசியதே சந்தியா முதல் 96 ஜானு வரை’ – கோலிவுட் குயின் திரிஷாவிற்கு இன்று பிறந்தநாள்..!

0

திரையுலகில் 18 வருடங்களாக சற்றும் குறையாத அழகுடன் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நடிகை திரிஷா இன்று (மே 4) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது யதார்த்தமான நடிப்பால் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை படைத்த நாயகிகளில் திரிஷாவும் ஒருவர்.

கோலிவுட் குயின்:

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இன்றும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடன் முன்பு நடித்த பல நாயகிகள் நீண்ட காலம் கதாநாயகியாக வலம் வர முடியவில்லை. அதே போல் தான் தமிழ் சினிமாவில் நடிகைகளால் நீண்ட காலம் கதாநாயகியாக நடிக்க முடியாது. மார்க்கெட் குறைந்து விட்டால் அக்கா, அண்ணி என குணச்சித்திர வேடத்தில் நடிக்க தான் வாய்ப்புகள் கிடைக்கும்.

இத்தகைய எழுதப்படாத விதிகளை நொறுக்கி 18 ஆண்டுகளாக தொடர்ந்து கதாநாயகியாக தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து சினிமாவில் மாஸ் ஆக வலம்வருபவர் திரிஷா. முதன் முதலில் கதாநாயகியாக நடித்த மௌனம் பேசியதே படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 போன்ற படங்களில் தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

உச்ச நடிகை:

விண்ணைத்தாண்டி வருவாயா, கில்லி, சாமி, திருப்பாச்சி ஆகிய படங்களின் மூலம் புது உச்சத்திற்கே சென்றார் த்ரிஷா. விஜய், அஜித், பிரபாஸ், மகேஷ் பாபு, ரஜினி என அனைத்து உச்ச நடிகர்களுடனும் நடித்து விட்டார் த்ரிஷா. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக சினிமாவில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். இன்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷாவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here