பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி.., மூக்குடை வாங்கிய பரம எதிரி.., உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி.., மூக்குடை வாங்கிய பரம எதிரி.., உற்சாகத்தில் ரசிகர்கள்!!
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி.., மூக்குடை வாங்கிய பரம எதிரி.., உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து சார்பில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரும் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்திய வீராங்கனைகள் அசத்தல்!

தெற்காசிய கால்பந்து சம்மேளன சார்பில் 6-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபால் தலைநகர் காத்தமாண்டுவில் உள்ள தசரத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஏழு அணிகள் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஏழு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றனர். குரூப் ஏ பிரிவில் இந்தியா, மாலத்தீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் நேபாளம், இலங்கை, பூட்டான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளது. இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நேபாள அணி வெற்றி பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனைத் தொடர்ந்து நேற்று குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான தகுதி சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினர். அதன்படி நடப்பு சாம்பியனான இந்தியா லீக் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 3 – 0 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் அனைவரும் பலமுறை கோல் அடிக்கும் முயற்சித்த போதும் இந்திய கோல் கீப்பர் சிறப்பாக அனைத்தையும் தடுத்து இந்திய அணியை வெற்றி பெற செய்துள்ளார். இந்திய அணி சார்பில் டாங்மி கிரேஸ், சவுமியா ஆகியோர் இருவரும் சிறப்பாக அடி இந்திய அணிக்கு கோல் அடித்து கொடுத்தனர்.

இந்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 27 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெற்று வீர நடை போட்டு வருகின்றனர். ஒரு புறம் இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி பாகிஸ்தான் அணியிடம் வீழ்ச்சியை சந்தித்தாலும், நேற்று நடைபெற்ற பெண்கள் கால்பந்து போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா மாலத்தீவை எதிர்கொள்ள உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here