தனது வளைகாப்பை தானே நிறுத்திய பிரபல நடிகை – பிரமாண்ட ஏற்பாடுகள் பாதிலேயே முடிந்த சோகம்!!

0
தனது வளைகாப்பை தானே நிறுத்திய பிரபல நடிகை - பிரமாண்ட ஏற்பாடுகள் பாதிலேயே முடிந்த சோகம்!!

பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு நேற்று பிரமாண்டமாக வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவரது இந்த நிகழ்வை அதிரடியாக அவரே நிறுத்திய செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அதிரடி:

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். ஆனந்த் அஹுஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். அண்மையில் சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு அறிவித்தார். இதையடுத்து தனது வளைகாப்பு நிகழ்வை, மும்பையில் உள்ள தனது அத்தை வீட்டில்  பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு, தடம் புடலாக ஏற்பாடு நடத்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பாராத விதமாக, நடிகை சோனம்-ன் இந்த நிகழ்ச்சிகளை அவரே  ரத்து செய்தார். அவரது இல்லத்தில் ஒரு சிறிய கெட் டூ கெதர் பார்ட்டி வைத்து  இந்த நிகழ்வை நடத்தி முடித்தார்.

இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, மும்பையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பொது நலன் கருதி இந்த  நிகழ்வை ரத்து செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here