கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சியான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

0

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டிருந்த சியான் விக்ரம் தற்போது அதிலிருந்து குணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

சியான் விக்ரம்:

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் மற்றும் பின்னணிப் பாடகராகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தாகவும் வலம் வருகிறார். அவர் ஆரம்பத்தில் நடித்த சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன் போன்றவை அடுத்தடுத்து வெற்றியை கொடுக்க முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது இவருக்கு கோப்ரா, தன் மகனுடன் சேர்ந்து நடித்த மகான், இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. இப்படி படங்கள் இருக்கும் நேரத்தில் திடீரென தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாக தகவல் கூறி அவரின் ரசிகர்களை கவலை அடைய செய்தார்.

மேலும், லேசான அறிகுறி தான் என்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும் கூறியிருந்தார்.தற்போது கொரோனா தொற்றில் இருந்து முற்றிலுமாக வெளிவந்த அவர் தனது ரசிகர் ஒருவருடன் சேர்ந்து போட்டோ ஒன்றை எடுத்துள்ளார். இப்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here