இந்த ஒரு Match-ல இவ்வளவு விஷயம் நடந்துச்சா.. சாதனை படைத்த பாகிஸ்தான் – நசீம் ஷா சிக்ஸரால் ஏற்பட்ட தாக்கம்!

0
இந்த ஒரு Match-ல இவ்வளவு விஷயம் நடந்துச்சா.. சாதனை படைத்த பாகிஸ்தான் - நசீம் ஷா சிக்ஸரால் ஏற்பட்ட தாக்கம்!
இந்த ஒரு Match-ல இவ்வளவு விஷயம் நடந்துச்சா.. சாதனை படைத்த பாகிஸ்தான் - நசீம் ஷா சிக்ஸரால் ஏற்பட்ட தாக்கம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வீரர் நசீம் அடித்த சிக்சரின் மூலம் கடந்த நான்கு வருட போட்டிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஆசிய கோப்பை 2022!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு மைதானத்திலும், வீரர்களுக்கு இடையில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. இந்த சூழ்நிலைகளை அனைத்தையும் தாண்டி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி ஒரு சிறப்பான சம்பவத்தை நினைவுபடுத்தி உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு ஆறு பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் 19 வயதான நசீம் இரண்டு பந்துகளில் தொடர்ச்சியாக சிக்ஸர்களை விளாசியதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டிகளின் வெற்றி குறித்த ரகசியங்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது, ஒருநாள் உலகக் கோப்பை 2019-இல், 2 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதேபோல், T20 உலகக் கோப்பை 2021 போட்டியில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது, தற்போது ஆசிய கோப்பை 2022 போட்டியில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here