சிவகார்த்திகேயன் டான் படத்திற்கு வந்த புதிய சிக்கல் – ரிலீஸ் தேதியில் மாற்றமா??

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படம், வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரிலீசில் சிக்கல்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் டான். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. வருகிற மார்ச் 25ஆம் தேதி, இந்த படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படம் வெளியாவதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த படம் ரிலீஸாகவுள்ள இதே தேதியில் ஆர் ஆர் ஆர் படமும் வெளியிடப்பட உள்ளது. இந்த இரண்டு படங்களுமே லைக்கா நிறுவனம் தயாரித்தது தான். இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் தியேட்டர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும் என்பதால், டான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவு இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here