மனோஜ் செய்த கொலை.., முத்து மீது விழுந்த கொலைப்பழி.., விஜயா கோவத்துக்கு இது தான் காரணம்!!!

0
மனோஜ் செய்த கொலை.., முத்து மீது விழுந்த கொலைப்பழி.., விஜயா கோவத்துக்கு இது தான் காரணம்!!!
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்த பல சுவாரசியமான திருப்பங்கள் வந்து கொண்டே உள்ளது. இப்போது ரோகிணி பார்லரை விற்ற விஷயம் முத்துவுக்கு தெரிந்து விட்டது. ஆனால் முத்து இந்த உண்மையை எல்லாரிடமும் சொல்லாமல் தன் அப்பாவிடம் மட்டும் தனியாக அழைத்து சொல்கிறார். மேலும் இந்த உண்மை குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் எப்போது தெரியும் என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜயா முத்துவின் மீது மட்டும் தொடர்ந்து கோபமாக உள்ளார். அதற்கான காரணம் என்னவென்று யாருக்கும் இப்போது வரை தெரியவில்லை.
இந்நிலையில் தான் முத்துவின் மீது விஜயா கோபப்படுவதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது சிறு வயதில் மனோஜ் முத்து எல்லோரையும் பாட்டி வீட்டில் தங்க வைப்பாராம். அப்போது குழந்தைகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மனோஜ் ஒரு சிறுவனை அடித்துக் கொன்று விடுவாராம். ஆனால் அந்த பழியை தூக்கி முத்துவின் மீது போட்டு விடுவாராம். இந்த உண்மை தெரியாத விஜயா முத்து தான் எல்லாத்துக்கும் காரணம் என அவரை வெறுக்க ஆரம்பித்து விடுவாராம். இந்த உண்மை வெளிவருவது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here