PKL 2024: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய டபாங் டெல்லி.., அடுத்த போட்டியிலும் தொடருமா??

0

12 அணிகளுக்கு இடையிலான 10-வது புரோ கபடி போட்டி பெங்களூர், ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (பிப்ரவரி 3) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் டபாங் டெல்லி அணிகளும் மோதின. இந்த போட்டியில் தொடர் வெற்றிகளை சந்தித்து வந்த தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் டபாங் டெல்லி வீரர்கள் தனது அதிரடி ஆட்டத்தால் 44-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதே போன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி பலம் வாய்ந்த UP யோதாஸ் அணியை எதிர்கொண்டு ஆடியது. இருவருக்கும் இடையில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 39-23 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பவை வீழ்த்தி UP யோதாஸ் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here