பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி!!

0

தமிழ் திரையுலகில் பிரபல பாடகர் ஆன எஸ்.பி பாலசுப்பிரமணியன் (SPB) அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பல அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது திரைத்துறை பிரபலங்களுக்கு பரவி வருகிறது. தற்போது இந்தியத் திரையுலகில் முக்கிய பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். 74 வயதான இவர் 1996ம் ஆண்டு முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். உலக அளவில் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இவர் இடம் பெற்று உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பிற அமைச்சர்கள்!!

2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் எஸ்.பி பாலசுப்பிரமணியனுக்கு வழங்கி இந்திய அரசு கவுரவித்து உள்ளது. தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்திய சினிமாவின் தன்னிகரற்ற பாடகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது ரசிகர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here