வெங்காயம் மூலம் பரவும் பாக்டீரியா காய்ச்சல் – பீதியில் அமெரிக்க மக்கள்!!

0
red-onions-outbreak-to-new-bacteria

கொரோனா வைரஸை அடுத்து அமெரிக்காவில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா பரவல் வெங்காயங்கள் மூலம் பரவுகிறது என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சால்மோனெல்லா என்ற பாக்டீரியா:

சால்மோனெல்லா என்ற இந்த பாக்டீரியா ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் பரவுகிறது. இது விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு பரவுகிறது.

லெபனானில் வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்- 73 பேர் பலி!!

Salmonella bacteria
Salmonella bacteria

பலர், இந்த பரவலுக்கு சிகிச்சை அளிப்படாமல் குணமானாலும், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குறைந்தபட்சமாக 400 பேர் வரை இந்த பாக்டீரியாவால் உயிர் இழக்கின்றனர்.

நோய்க்கான அறிகுறிகள்:

இது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தான் அதிகமாக தாக்கும். யார் ஒருவர் சரியாக சமைக்க படாத உணவுகளை உண்கிறார்களோ அவர்களுக்கு இந்த பாக்டீரியா பரவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இந்த நோய்க்கான அறிகுறிகளாக, காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் பித்தம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

solmonella bacteria spreads through onions
solmonella bacteria spreads through onions

தற்போது, இந்த ஆண்டிலும் இந்த நோய் பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள 34 மாகாணங்களில் இந்த நோய் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது உள்ள நிலவரப்படி 500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் இறந்துள்ளார் என்றும் அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.

எவ்வாறு பரவுகிறது:

இது எவ்வாறு பரவுகிறது என்று ஆராய்ச்சி செய்த அதிகாரிகள் கூறியதாவது ” இந்த நோய் தற்போது சிவப்பு வெங்காயங்களில் இருந்து தான் பரவுகிறது. கடந்த மே மாதம் தாம்சன் என்ற வெங்காயம் தயாரிப்பு நிறுவனம் தான் இதற்கு காரணம் என்று அவர்கள் விநியோகித்த வெங்காயங்களில் தான் இந்த பாக்டீரியா பரவுகிறது.

மக்கள் அனைவரும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யார் விநியோகிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றால், மக்கள் அந்த வெங்காயங்களை பயன்படுத்த வேண்டாம்” என்று அதிகாரிகள் தெரிவவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here