வாட்ஸ் ஆப்பை பின்னுக்கு தள்ளிய சிக்னல் செயலி – வைரலாகும் பதிவு!!

0
signal

இலவச ஆப்ஸ் பதிவிறக்கம் செய்யும் பிரிவில் வாட்ஸ் ஆப்பை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்ததுள்ளது சிக்னல் மெசேஞ்சர் செயலி. வாட்ஸ் ஆப்பின் தனிநபர் தகவல் பதிவு தொடர்பாக வெளியான அப்டேட் காரணமாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் சிக்னல் செயலிக்கு மாறியுள்ளனர்.

சிக்னல் மெசேஞ்சர் செயலி

தகவல் தொடர்புக்காக உலகம் முழுவதும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது. தற்போது வாட்ஸ் ஆப் செயலியில் வந்த புதிய அப்டேட்டுகள் பயனாளர்களின் தனி நபர் தகவல்களை பேஸ்புக் செயலியுடன் இணைக்க வலியுறுத்தி வந்தது. இதனால் தனிநபரின் தகவல்களுக்கு இந்த செயலியில் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து மக்களிடையே நிலவிவருகிறது. மேலும் வாட்ஸ் ஆப்பின் விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அந்த செயலியை பயன்படுத்த முடியும் என இந்நிறுவனம் கூறிவருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விதிமுறைகள் வாட்ஸ் ஆப் பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இதனால் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் அந்த செயலிக்கு மாற்றான செயலியை தேடி வந்தனர். தற்போது வாட்ஸ் ஆப் செயலுக்கு மாற்றாக சிக்னல் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்கும் சிக்னல் மெசேஞ்சர் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ரஜினி ரசிகர்களின் ஓட்டு பாஜக.,விற்குதான் – மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!!

தற்போது சிக்னல் செயலி பயன்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜெர்மனி, ஹாங்காங், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பின்லாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சிக்னல் செயலியை அதிகஅளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் ஆப் ஸ்டோரில் இலவச செயலி பதிவிறக்கம் பிரிவில் சிக்னல் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் சிக்னல் முதலிடத்திலும் வாட்ஸ் ஆப் இரண்டாம் இடத்திலும் இருப்பதை ஸ்க்ரீன் சாட் செய்து பகிர்ந்துள்ளது சிக்னல் நிறுவனம். பங்கு சந்தையில் சிக்னல் செயலி கடந்த வியாழக்கிழமை 527 சதவீதமும் வெள்ளிக்கிழமை கூடுதலாக 91 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here