‘பேரழிவு விளைவுகளை கணிப்பதில் அரசு, தேர்தல் ஆணையம் தவறிவிட்டது’ – உயர்நீதிமன்றம் வேதனை!!

0

இந்திய தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கம் சில மாநிலங்களில் தேர்தல்கள் மற்றும்  உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல்களையும் அனுமதிப்பதன் மூலம் பேரழிவு மற்றும் விளைவுகளையும், புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

பேரழிவு விளைவுகளை கணிப்பதில் தோல்வி:

உ.பி.,யின் காஜியாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் கூறுகையில், உ.பி., நகர்ப்புறங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மிகுந்த சிரமப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும், பரிசோதனை நடத்துவதும் கடினமாக உள்ளது.

கொரோனா வைரஸ் முதல் அலையின் போது உ.பி.,யின் கிராமங்களுக்கு அதிக அளவில் தொற்று பரவவில்லை. தற்போது 2ஆம் அலையின் தாக்கம் இந்த பகுதியில் அதிகமாக பரவி உள்ளது. இதை கணிப்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

முன்னதாக நடை பெற்ற பஞ்சாயத்து தேர்தலின் போது ஏராளமான மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் ஒரு சில மாநிலங்களிலும், உ.பி.,யிலும் தேர்தல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளை கணிக்க தேர்தல் ஆணையம் மற்றும் அரசுகள் தவறிவிட்டன என உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here