கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்தார் டாம் க்ரூஸ் !!!

0

கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அளித்தார் டாம் க்ரூஸ் 

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தான் வாங்கிய கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளார். நிறவெறி சர்ச்சை காரணமாக இவ்விருதுகளை திருப்பி அளித்ததாக கூறப்படுகிறது.

நிறவெறி சர்ச்சை

1944-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அஸோசியேஷன் ஆனது ஆண்டுதோறும் திரை மற்றும் சின்னத்திரையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு கோல்டன் குளோப் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. ஆஸ்கர் விருதுக்கு இணையான கோல்டன் குளோப் விருதுகள் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்கு மூன்று முறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 19 ஆண்டுகளாகவே கறுப்பினத்தவர்கள் யாரையும் இவ்வமைப்பு அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

எனவே ஹாலிவுட் கலைஞர்களுக்கிடையே இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தான் வாங்கிய விருதுகளை திருமப அளித்துள்ளார். இந்த அமைப்பில் மொத்தம் 90 பேர் பணியாற்றி வந்த நிலையில் உறுப்பினர்கள் குழுவில் மாற்றம் செய்ய விட்டால் இனி வரும் காலங்களில் விழாவை ஒளிபரப்பு செய்ய போவதில்லை என்றும் NPC நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here