குறுகிய தூர ரயில்களின் கட்டணம் உயர்வு – இந்திய ரயில்வே அறிவிப்பு!!

0

கடந்த கொரோனா காலத்தில் அதிக நஷ்டத்தை சந்தித்து வந்த ரயில்வே துறை, தற்போது குறுகிய தூர ரயில்களின் பயண கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில்வே:

உலகம் முழுவதும் கொரோனா என்னும் வைரஸ் கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது. மேலும் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் அதிக அளவில் கொரோனாவின் பாதிப்பு இருந்ததால் போக்குவரத்து சேவையை முழுவதுமாக தடை செய்தனர். இதனால் பேருந்து மற்றும் ரயில்வே துறைக்கு நஷடம் ஏற்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே துறைக்கு பெரும் நஷடம் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா காலத்தில் ரயில்வே ஊழியர்களுக்கும் வேலை இல்லாமலே சம்பளத்தை வழங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரயில்வே துறை நிதி நெருக்கடிக்கு உள்ளாகியது. தற்போது சில மாதங்களாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்படவில்லை. தற்போது வரை ரயில்வே துறை நிதி நெருக்கடியில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. மேலும் கொரோனாவில் இருந்து நாம் முழுவதுமாக மீளாத நிலையில் மக்கள் அச்சமின்றி விதிமுறைகளை பின்பற்றாமல் ரயில்களில் சென்று வருகின்றனர்.

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி!!

இதனால் மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனை தடுக்கும் வகையிலும், மேலும் ரயில்வேயின் நிதிநெருக்கடியை சரிசெய்யும் வகையிலும் ரயில்வே துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குறுகிய தூர ரயில்களில் பயணத்திற்கான டிக்கெட்டின் கட்டணத்தை ரயில்வே உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கட்டண உயர்வு புறநகர் ரயில்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தேவை இல்லாமல் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here