தமிழகத்தில் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கம் – வேலைநிறுத்த போராட்டம் தீவிரம்!!

0

இன்று பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முன்னரே அறிவித்தபடி தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 50 சதவீதம் அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

வேலை நிறுத்த போராட்டம்

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் தொழிலாளர்கள் பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இது முன்னரே அறிவித்தது தான். இது காலவரையற்ற போராட்டம் என்றும் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்த போராட்டம் தொழிலாளர்களால் தொடரப்பட்டு வருகின்றது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு – ரூ.810 ஆக நிர்ணயம்!!

இதன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. தலைநகர் சென்னையிலும் இதே நிலை தான் தொடர்கிறது. மற்ற நகரங்களால கும்பகோணம், தூத்துக்குடி, விருதுநகர், மரக்காணம் ஆகிய பகுதிகளில் மிக குறைந்த அளவில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசுப்பேருந்துகள் இப்படியாக இயக்கப்பட்டு வந்தாலும், தனியார் பேருந்துகள் வழக்கம் போலவே இயக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மிக குறைந்த அளவில் தான் உள்ளுர் மற்றும் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here