என்ன ஆடை அணிய வேண்டும் என்பது என்னுடைய உரிமை – கொந்தளித்த ஷிவானி நாராயணன்!!

0
shivani narayanan
shivani narayanan

விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமான ஷிவானி நாராயணன் தற்போது பட வாய்ப்புகளுக்காக தனது வலைதள பக்கங்களில் அரைகுறை ஆடைகளுடன் போஸ் கொடுத்து வந்தார். இதற்கு பலரும் உங்கள் வயதிற்கு ஏற்றார் போல இருங்கள் என்று அவரை திட்டி தீர்த்து வந்தனர். தற்போது அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷிவானி நாராயணன்

ஆரம்பத்தில் விஜய் டிவி சீரியலில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியலில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான் ஷிவானி. அந்த சீரியலில் ஒரு ஜோடிகள் விலகியதால் இவர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார்.  பகல் நிலவு சீரியலில் ஷிவானி – அர்ஜுன் ஜோடி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலுக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நாயகியாக நடித்தார்.

shivani narayanan
shivani narayanan

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் ஜீ தமிழில் ரெட்டை ரோஜாவில் வாய்ப்பு கிடைக்கவே கடைக்குட்டி சிங்கம் சீரியலில் பாதியில் வெளியேறினார். ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்த ஷிவானி தனது இரண்டு கதாபாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்தி இருந்தார். ஆரம்பத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி லாக்டவுனில் இருந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். ஷிவானியா இது? என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

shivani narayanan
shivani narayanan

தற்போது அரைகுறை ஆடைகளுடன் டான்ஸ் ஆடுவது, போட்டோக்கள் வெளியிடுவது என தொடர்ந்து செய்து வந்தார். பலரும் உங்களுக்கு வயதுக்கு ஏற்ற செயலை செய்யுங்கள் என்று கண்டித்து வந்தனர். ஆனால் இப்பொழுது ஆபாசமான கமன்ட்களும் செய்து வருகின்றனர். அதற்கு பதிலடி குடுக்கும் அளவிற்கு ஷிவானி தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

shivani narayanan
shivani narayanan

அதில் அவர் குறிப்பிட்டிருந்தது, “யூ டியூப்பில் இருக்கும் ட்ரோல் பக்கங்களுக்கும், 3ம் தர கமன்ட் செய்பவர்களுக்கும் தான் இந்த பதிவு. இவர்கள் மற்றவர்களை பற்றி தவறான கன்டென்டை உருவாக்கி அதில் பணம் சம்பாதிக்கின்றனர். அத்தகைய வீடியோவை ஒரு பெண்ணே பேசி இருக்கிறார் என்பது வருத்தமாக உள்ளது. ஆடைகள் அணிவது என்னுடைய உரிமை. மேலும் எந்த ஆடைகளை அணிய வேண்டும், அணிய கூடாது என்பது எனக்கு தெரியும். என் வளர்ப்பு மற்றும் குடும்பத்தை பற்றி பேசியதற்கு… என்னுடைய பெற்றோர் என்னை நன்றாக வளர்த்துள்ளனர்.

View this post on Instagram

This post is To all those creeps who are posting 3rd rate comments on my comment section as well to some troll pages on YouTube who earn money and live out of making cheap contents on others .. And the very pity part about that is to hear a female voice over for such cheap trolls , don’t you feel ashamed ? By the way I have the right to decide my outfits.. What to wear and what not to .. And to those who comment bad about my brought up and family — “my parents have brought me up so well in the way I have the liberty to make choices of my own”.. The pics I post , the way I dance or I sing it’s all purely out of my interest not in the intention to impress anyone and there’s no need for me to do such and body shaming me in comparison my with age will never hurt me and don’t try , “coz you gonna fail” .. finally it’s none of your business … And I will not turn off my comment section for the sake of you creeps while there are thousands of good hearts to comment .. I will pray almighty for you mind sick creeps to grow up …

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

எனக்கு விருப்பமான ஒன்றை செய்வதற்கு எனக்கு சுதந்திரத்தை அளித்துள்ளனர். நான் வெளியிடும் புகைப்படம், வீடியோ இவை அனைத்தும் என்னுடைய விருப்பத்திற்காக செய்வது யாரையும் கவருவதற்காக அல்ல. மேலும் உங்களுக்காக என் கமன்ட் செக்ஷனை நான் ஆப் செய்ய மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார். பலரும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஆபாச கமன்ட் செய்பவர்களுக்கு ஷிவானியின் பதிவு சரியான பதிலடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here