கருப்பு நிற உடையில் ஷாலினியுடன் ஷாமிலி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ..!!! தல அஜித் எங்க?? என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!!!

0

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, அவரது அக்கா ஷாலினியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தென்னிந்திய சினிமாவில் பல மொழிகளில் கலக்கிய குழந்தை நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர் ஷாமிலி. இவர் தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “அஞ்சலி” திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தை கதாபாத்திரமாக தோன்றியது யாராலும் மறக்கவே முடியாது.

அதே போல் இவரது சகோதரி மற்றும் தல அஜித்தின் மனைவியுமான ஷாலினி தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி பிரபலங்களுடன் நடித்து கலக்கி கொண்டிருந்தவர். திருமணத்திற்கு பின்னர் சினிமாக்களில் தோன்றுவதை குறைத்து கொண்டார் நடிகை ஷாலினி. இன்றளவும் நட்சத்திர ஜோடி என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது அஜீத் – ஷாலினி ஜோடிதான்.

தற்போது ஷாமிலி, ஷாலினியுடன் கருப்பு நிற உடையில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தல அஜித் எங்க?? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here