40 வயதில் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் விஜய் டிவி நடிகை.., அழகிய வளைகாப்பு புகைப்படங்கள் வைரல்!!

0

கேரளாவில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், அவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தமிழ் சினிமாத்துறை தான். அப்படி மனசெல்லாம் திரைப்படத்தில் ஸ்ரீகாந்தின் தங்கையாக தோன்றிய சந்திரா லட்சுமணன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவரானார். இதையடுத்தும் தொடந்து தமிழில் துணை நடிகையாக நடித்து வந்தவர் மலையாளத்திலும் களமிறங்கி பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

mahalakshmi

இவர் தமிழ் திரைபடம் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்திருந்தாலும், ஸ்வாந்தம் என்னும் மலையாள தொடர் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். அதையடுத்து தமிழிலும் கோலங்கள், வசந்தம், மகள், சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். குறிப்பாக விஜய் டிவியில் காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்து பயங்கர ரீச்சை அடைந்தார்.

அதன் வரிசையில் இவர் நடித்த மலையாள சீரியலில் இவருடன் ரீல் ஜோடியாக நடித்த டோஷ் கிறிஸ்டியம் என்பவரையே காதலித்து ரியல் ஜோடி ஆக்கி கொண்டார். இந்நிலையில் சந்திரா கர்ப்பமாக இருக்கும் செய்தியை வளைகாப்பு புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 38 வயதில் திருமணம் செய்து கொண்ட சந்திரா தற்போது கர்ப்பமாக இருப்பதை அறிந்த ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமாக இருக்கிறார்கள். மேலும், ரெண்டு பேரும் பார்ப்பதற்கு..கண்ணே பட்டு விடும் போல இருக்கு என கமெண்ட் செய்தும் வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here