இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் விளக்கம்!!

0
kp-anbalagan
kp-anbalagan

தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கம் அளித்து உள்ளார்.

இறுதியாண்டு தேர்வுகள் ரத்து?

தமிழகத்தில் இன்று கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில் பட்டய படிப்புகள் உட்பட அனைத்து பட்டபடிப்புகளுக்கும் இறுதியாண்டு தவிர மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படாதது மாணவர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – விழி பிதுங்கும் மக்கள்!!

Tamilnadu CM
Tamilnadu CM

இந்நிலையில் தமிழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து விலக்கு அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்து உள்ளார். இது குறித்து மத்திய அரசின் பதில் வந்ததும் இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here