பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?? புதிய கொரோனா அச்சத்தில் மாநில அரசு!!

0

பள்ளிகளை வரும் ஜனவரி மாதம் முதல் திறக்க முடிவு செய்திருந்த நிலையில், புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் அச்சம் நிலவுகிறது. எனவே பள்ளிகள் திறப்பு தேதி மேலும் தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு:

உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ், தற்போது இங்கிலாந்து நாட்டில் பரவத்தொடங்கியுள்ளது. அங்கு பலருக்கும் கொரானா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் இங்கிலாந்திலிருந்து, இந்தியா வந்த 1000க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பிறகே அது புதிய வகை கொரோனா வைரஸா என்பது தெரியும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து மற்றும் சில மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மஹாராஷ்டிரா, கார்நாடகா போன்ற மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

night lockdown
night lockdown

இந்நிலையில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கவும், மேலும் கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்களை திறக்கவும், கர்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் புதிய கொரோனா அச்சம் காரணமாக, பள்ளிகளை திறப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டியலின மாணவர்களுக்கு 6000 கோடி கல்வி உதவித்தொகை – மத்திய அரசு திட்டம்!!

இதுகுறித்து பேசிய கர்நாடக சுகாதார துறை அமைச்சர் கே. சுதாகர், ” 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தவிர்த்து 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக எடுக்கப்பட்ட முடிவு டிசம்பர் 29ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு பிறகு கொரோனா வைரஸின் தாக்கத்தினை பொறுத்து முடிவு மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here