பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.., இனி 6 வகுப்பு சேர்க்கைக்கு இது கட்டாயம் தேவை.., மாநில அரசு அதிரடி!!

0
தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள்  எந்தவித தேர்வும் இன்றி பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இனி வரும் நாட்களில் இதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை 6 முதல் 8ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றால் அந்த மாணவன் நிச்சயம் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒருவேளை ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை எனில் அந்த மாணவனுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பில் சேர்க்கப்படுவார். இல்லையெனில் அந்த மாணவன் மீண்டும் 5ம் வகுப்பிலே சேர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here