இன்று முதல் பள்ளிகள் திறப்பு – எந்தெந்த மாநிலங்களுக்கு தெரியுமா??

0
schools-mask

கொரோனா தொற்றுநோய் காரணமாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது கொரோனா குறைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.முதலில் மேல்நிலை வகுப்புகளிலிருந்து, பின்னர் கீழ்நிலை வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படலாம் என திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கவேண்டும் என்று உத்த்ரவிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒடிசாவிலும் நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு

ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டும் நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம். மற்ற மாணவர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஆந்திர பிரதேஷ், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இன்று முதல் (நவம்பர் 2) பள்ளிகள் திறக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை நவம்பர் 16 ஆம் தேதிக்கு மேல் முடிவெடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய அரசின் பள்ளிகளும் நாடு முழுவதும் இன்று முதல் திறப்படுகின்றது. கேந்த்ரிய வித்யாலய ,நவோதய வித்யாலய போன்ற மத்திய அரசு பள்ளிகளுக்கு 9முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு உத்ரவிடப்பட்டுள்ள அனைத்து நெறிமுறைகளையும் மற்றும் கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 16 மாணவர்கள் மட்டும் வகுப்புகளில் அமர வைக்கவேண்டும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

schooling
schooling

அனைத்து மாணவர்களும் போதிய இடைவெளியை விட்டு அமரவேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மாணவர்கள் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ள சானிடைசர்கலள் மற்றும் தண்ணீர் வசதிகளும் இருக்க வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். பல்வேறு மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில் அனைவரும் பாதுகாப்புடனும் மற்றும் கவனமுடைனும் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here