தமிழக பள்ளிகள் கவனத்திற்கு..,  இனி விடுமுறை விட இதான் கண்டிஷன்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!

0
தமிழக பள்ளிகள் கவனத்திற்கு..,  இனி விடுமுறை விட இதான் கண்டிஷன்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!
தமிழக பள்ளிகள் கவனத்திற்கு..,  இனி விடுமுறை விட இதான் கண்டிஷன்.., பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை விடுமுறை விடுவது குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

  • இனி வரும் நாட்களில் அதிக கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது.
  • மேலும் மாவட்டம் முழுவதும் மழை நிலவரம் பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் பின்னரே விடுமுறை குறித்து மாவட்ட கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

  • மாவட்ட கலெக்டர் விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்புதான் எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க கூடாது எனவும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
  • அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் அதை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் நிச்சயம் பள்ளிகள் செயல்பட வேண்டும். விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்தப்பட வேண்டும். இதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

சாதனையின் உச்சத்தில் IND vs NZ உலக கோப்பை போட்டி…, வைரலாகும் பதிவு உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here