பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று கூறி பிரதீப்பை சமீபத்தில் கமல்ஹாசன் எலிமினேட் செய்த சம்பவம் தான் இப்போது வரை சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. என்ன தான் பிரதீப் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், அவரை பற்றி தான் தினமும் ஹவுஸ்மேட்ஸ் பேசி வருகின்றனர். இன்று நடந்து வரும் உன்னை போல் ஒருவன் டாஸ்க்கில் விளையாடி வரும் போட்டியாளர்களின் உண்மையான முகம் ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் உன்னை போல் ஒருவன் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளருக்கு கோல்ட் ஸ்டார் வழங்குவதற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதில் அனைவரையும் மணி சந்திரனுக்கு வாக்களிக்க, மாயா உச்ச கோபத்தை அடைகிறார். எதற்கு மணியை save பண்ண நினைக்கிறீங்க என்று மாயா கத்தும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.
View this post on Instagram