ஓடிடி தளத்தில் ரீலீஸாகும் முன்னணி நடிகரின் அடுத்தடுத்த படங்கள் – ஸ்தம்பித்து நிற்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!!

0

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் மற்றும் உடன்பிறப்பே என்ற இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் ரிலீசாவதாக தகவல் வந்துள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள்:

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார்.  இவரின் படங்கள் அனைத்தும் பல மக்களின் மனம் கவர்ந்ததாக இருக்கும். அண்மையில் இயக்குனர் பொன்ராம் தயாரிப்பில் சிறந்த கிராம படமாக உருவான எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தில் இவர் நாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார்.   இந்த படத்தில், மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகிய பலரும் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏற்கனவே, இவர் நடிப்பில் உருவான உடன்பிறப்பே என்ற படமும் ஆன்லைனில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத் தகுந்தது. கொரோனா காலத்தில் இருந்தே பல படங்கள் ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் போன்ற OTT தளங்களில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here